பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு


பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு
x

குடவாசல் அருகே பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே உள்ள அகரஓகையில் செயல்படும் பட்டாசு ஆலையில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, தொழில் பாதுகாப்பு துறை இணை ஆணையர் அனிதாரோஸ்லின் மேரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது வெடி பொருட்கள் கலக்கும் இடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? தண்ணீர் வசதி உள்ளதா? என பார்வையிட்டார். அப்போது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் தேவகி, மண்டல துணை தாசில்தார் சரவணன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு உள்பட அதிகாரிகள் இருந்தனர்.

1 More update

Next Story