ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
இலுப்பூரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் அனைத்து மூல பொருட்களுக்கும் காலாவதி தேதி உள்ளதா? அயோடின் உப்பு பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டல்களில் விற்கப்படும் சிக்கன் 65 போன்ற உணவு பொருட்களில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்துகின்றனரா என ஆய்வு செய்த அலுவலர் செயற்கை வண்ணங்களை பயன்படுத்த கூடாது, கையுறை, தலையுறை பயன்படுத்திட வேண்டும். ஓட்டல் மற்றும் கழிவறை உள்ளிட்டவைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். சுகாதாரமான இறைச்சிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களிடம் அறிவுரை வழங்கினார். மேலும் பல ஓட்டல்களில் மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.