ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு - அமைச்சர் ரகுபதி தகவல்


ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு - அமைச்சர் ரகுபதி தகவல்
x

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

"தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.

காப்பீடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போட்டிகளை நடத்துபவர்களை காப்பீடு செய்கின்றனர். வரும் காலங்களில் போட்டி நடத்தவதற்காக விழா அமைப்பாளர்கள் காப்பீடு செய்வதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்".

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story