உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம்


உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம்
x

உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலனை நியமனம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தில் உளவுத்துறை சிறப்பாக செயல்படவில்லை என காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story