விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க தீவிர நடவடிக்கை


விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க தீவிர நடவடிக்கை
x

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் தலைமறைவான ஊராட்சி செயலாளரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராமசபை கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயி கேள்வி ேகட்டதற்காக ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் காலால் அவரை எட்டி உதைத்த சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயம் அடைந்த அம்மையப்பன் ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டார்.ஊராட்சி செயலாளரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள். அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து கலெக்டரும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், நடந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் வருத்தம் தெரிவிப்பதாக சங்கத்தின் துணைத்தலைவர் ராமசுப்பு உள்பட அந்த சங்கத்தினர் வந்தனர்். அப்போது, வீட்டில் அம்மையப்பன் இல்லை.இதையடுத்து சங்க துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது:-ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தங்களது சங்கத்தில் இல்லை. இருப்பினும் ஊராட்சி செயலாளர்கள் என்ற முறையில் வருத்தம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனை நேரில் சந்திக்க வந்தோம். ஆனால் அவர் வெளியில் சென்றுவிட்ட நிலையில் சந்திக்க முடியவில்லை.தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story