துபாய் செல்லாமல் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்ட சர்வதேச விமானம் - காரணம் என்ன?


துபாய் செல்லாமல் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்ட சர்வதேச விமானம் - காரணம் என்ன?
x

மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மதுரை,

மதுரையில் இருந்து 161 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மதியம் 12 மணியளவில் புறப்பட தயாராக இருந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பயணிகள் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் தற்போது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து வரும் நிலையில், விமானம் புறப்பட தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மீண்டும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 6 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story