சர்வதேச யோகா தினம்


சர்வதேச யோகா தினம்
x

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முத்து தலைமை தாங்கி நடத்தி வைத்தார். யோகாவின் சிறப்பு குறித்தும் யோகாவிற்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்தது குறித்தும் பேசினார். மாணவிகளுக்கு யோகா பயிற்சிகல்வியியல் கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவ.மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் கவிதா, உதவி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் கூறிராஜூ, முருகேஸ்வரி, சேதுராஜ் பாண்டியன், மரிய மகிழ்ச்சி, புஷ்பாரதி மற்றும் நூலகர் செந்தில் கணேஷ் அலுவலக ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் அலுவலக கணினி தட்டச்சர் கவிதா உள்ளிட்டவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story