இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.
நேர்காணல்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தில் இலவசமாக தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் பெறுவதற்கு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி 95 பேர் விண்ணப்பங்கள் அளித்திருந்தனர்.
அவர்களுக்கான நேர்காணல் இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். முட நீக்கியல் வல்லுனர் சுதாகர் முன்னிலை வகித்தார்.
தையல் எந்திரங்கள்
அவர்கள் தங்களது தையல் திறனை தையல் ஆசிரியை பிரமிளா முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இலவச தையல் எந்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தகுதி உடையவர்களாய் என்பதை சரி பார்க்க நேர்காணல் நடத்தப்படும். அதன்படி நடத்தப்பட்ட நேர்காணலில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
தகுதி உடையவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
இதற்கான நிதி ஒதுக்கீடு வரப்பெற்ற பின்னர் ரூ.6,840 மதிப்பிலான தையல் எந்திரம் வழங்கப்படும். எந்திரங்கள் பெறும் மாற்றுத்திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
நவீன தையல் எந்திரங்கள் பெற விரும்பினால் கூடுதல் மதிப்பு தொகை அவர்கள் வரைவோலையாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் அவர்களுக்கு அந்த நவீன எந்திரங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.