ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 116 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு 7,675 பேர் இணையவழி மூலம் விண்ணப்பித்தனர். இதையடுத்து .இவர்களுக்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்கப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இந்த நேர்காணலை மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான மீனா அருள் நடத்தினார். காலையில் நடைபெற்ற நோ்காணலில் 375 பேரும், மதியம் நடைபெற்ற நேர்காணலில் 375 பேரும் கலந்து கொண்டனர். மேலும் சான்றிதழும் சரிபார்க்கப்பட்டது. இந்த நேர்காணல் வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story