தொழிற்சாலைக்குள் புகுந்து கொலை மிரட்டல்; தி.மு.க. எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளில் வழக்கு
தனியார் நிறுவனத்தின் புகுந்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள மல்ரோஜாபுரத்தில் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.ராஜா, இந்த கம்பெனிக்குள் அத்துமீறி நுழைந்து, நிர்வாகியிடம் கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஆபாசமாக பேசியதாக வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுபற்றி தனியார் கம்பெனியின் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. மீது அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், ெகாலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story