ஒகேனக்கல் காப்புக்காட்டில்தூக்கில் முதியவர் பிணம்போலீசார் விசாரணை


ஒகேனக்கல் காப்புக்காட்டில்தூக்கில் முதியவர் பிணம்போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Aug 2023 1:00 AM IST (Updated: 17 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் தொங்கினார். இது குறித்து வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கிய முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story