சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: 2 பேர் கைது


சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: 2 பேர் கைது
x

ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 18 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான 'டிக்கெட்' மைதானத்தின் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக டிக்கெட்டுகள் வைத்திருந்த ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தாஹா அலி (வயது 18), திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்திலக் (33) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 18 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story