தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மதிக்கின்ற அரசு மத்தியில் தேவை.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மதிக்கின்ற அரசு மத்தியில் தேவை.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 7 March 2024 12:22 PM GMT (Updated: 7 March 2024 4:05 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதவது;

"அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றியுள்ளோம். யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8. மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டத்தை மத்திய அரசின் உதவி இல்லாமல் செய்கிறோம். மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும். காலம் கனிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story