"மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான்" - டிடிவி தினகரன் பேட்டி


மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான் - டிடிவி தினகரன் பேட்டி
x

மன்னிப்பு கேட்கும் இடத்திலும், கடிதம் கொடுக்கும் இடத்திலும் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

"எங்கள் மூவருக்கு துரோகம் செய்தவர்கள் அவர்கள். துரோகம் செய்த அவர்கள் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் அவரும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர்.

கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம்; ஈபிஎஸ் ஆட்சியில் கோடநாடு சம்பவம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக தகவல். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.




Next Story