டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு
வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
சென்னை,
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது. இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கபட மாட்டாது என்றது. தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.