''அ.தி.மு.க.வுக்கு திருப்பு முனையாக அமையும்''


அ.தி.மு.க.வுக்கு திருப்பு முனையாக அமையும்
x

மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெற உள்ள மாநாடு ‘‘அ.தி.மு.க.வுக்கு திருப்பு முனையாக அமையும்’’ என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை

மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பேட்ஜ்களை புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினருக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரையில் ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு வியக்கும் வகையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு அ.தி.மு.க.வுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும். எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க. ஆளும் கட்சியாக மாறுகிற திருப்புமுனையாக மாநாடு அமையும். இன்றைய ஆட்சியின் மீது மக்களிடையே அதிருப்தியும், வெறுப்பும் இருக்க கூடிய நிலை உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என மக்கள் எதிர்பாா்க்கின்றனர். கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் பலர் இணைந்து விட்டனர். அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு முதன்மை இடத்தில் உள்ளது. கூட்டணி கட்சிகளுடான கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகே எடப்பாடி பழனிசாமி அமர்ந்தது அனைவரது புருவத்தையும் உயர்த்தி பார்க்க வைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு. அ.தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பு தானத்தில் 6 ஆண்டுகள் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. தற்போது தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்க வேண்டும். சுகாதாரத்துறையில் டாக்டர்கள், பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். சுகாதாரத்துறையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story