வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி திருடியவருக்கு சிறை தண்டனை


வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி திருடியவருக்கு சிறை தண்டனை
x

வள்ளியூர் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி திருடியவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே வடக்கு ஆச்சியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரேமா (வயது 35) என்பவர் தனது குடும்பத்துடன் ஆனைகுளம் துர்க்கையம்மன் கோவில் கொடை விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பிரேமா தனது கணவரின் உறவினர் வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் புகுந்து பிரேமாவின் கழுத்தில் இருந்த 8½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு ரெட்டை போஸ்ட் தெருவை சேர்ந்த சுடலைப்பழம் (44) என்பவரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை வள்ளியூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஆனந்த் விசாரித்து சுடலைப்பழத்திற்கு 1 வருடம் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story