இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி


இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி
x

தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஜான்பாண்டியன், அவரது மகன் வியங்கோ பாண்டியன், நயினார் கோவில் ஒன்றிய செயலாளர் மகேந்திர பாண்டியன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறும் போது,, தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது வரவேற்கதக்கதாகும். அதே போல் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றார்.

1 More update

Related Tags :
Next Story