ஜப்பான்: கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


ஜப்பான்: கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
x

ஜப்பான், ஒசாகா மாகாணத்தில் உள்ள கொமாட்சு நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒசாகா,

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு 25.5.2023 அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து 26.5.2023 அன்று காலை ஓசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேற்றைய தினம் (26.5.2023) பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு. அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.


Related Tags :
Next Story