திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1,500 ஆக உயர்வு


திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1,500 ஆக உயர்வு
x

முல்லை, கனகாம்பரம், ஜாதி மல்லி, செவ்வந்தி, சம்பங்கி, அரலி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்,

ஆடி மாத பண்டிகையையொட்டி திண்டுக்கல் அண்ணா மலர் சந்தை வளாகத்தில், பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை, தற்போது 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதே போல முல்லை, கனகாம்பரம், ஜாதி மல்லி, செவ்வந்தி, சம்பங்கி, அரலி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story