கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ,4,500-க்கு விற்பனை


கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ,4,500-க்கு விற்பனை
x

2 ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமாரி,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சந்தையான தோவாளை மலர் சந்தையில் இன்று விற்பனை களைகட்டியுள்ளது. கேரளாவின் தெற்கு பகுதி முதல் வாடக்கு பகுதியான கோழிக்கோடு வரை ஏராளமான பூ வியாபாரிகள் இங்கு வந்து மொத்த விலைக்கு பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக இங்கு சுமார் 50 டன் பூ வியாபாரம் நடைபெறும் நிலையில், இன்று சுமார் 300 டன் அளவிற்கு பூ வியாபாரம் நடைபெற்றுள்ளது.

10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.300-க்கு விற்பனையாகி வந்த மல்லிகைப்பூ, இன்று கிலோ ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் சம்பங்கிப்பூவின் விலை ரூ.80 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. அரளி பூவின் விலை ரூ.200-ல் இருந்து இன்று ரூ.600 ஆகவும், செவ்வந்திப்பூ ரூ.100-ல் இருந்து ரூ.400 ஆகவும், வாடாமல்லி ரூ.50-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 More update

Next Story