மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக ஒருங்கிணைப்பாளர் ஜவகர்நேசன் அறிவிப்பு


மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக ஒருங்கிணைப்பாளர் ஜவகர்நேசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2023 2:08 PM GMT (Updated: 10 May 2023 2:44 PM GMT)

மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்று வந்தார். இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், எந்த நோக்கத்திற்காக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Next Story