ஜேசிடி பிரபாகரன் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்: அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
ஜேசிடி பிரபாகர் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது.
அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story