லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 9½ பவுன் நகை பறிப்பு


லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 9½ பவுன் நகை பறிப்பு
x

நாமக்கல்லில் லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 9½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல்-சேலம் சாலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். லாரி பட்டறை அதிபர். இவரது மனைவி இந்திராணி (வயது 60). இவர் நேற்று மதியம் அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து இந்திராணி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story