திருத்தணியில் போலீஸ்காரர் வீட்டில் நகை- பணம் திருட்டு


திருத்தணியில் போலீஸ்காரர் வீட்டில் நகை- பணம் திருட்டு
x

திருத்தணியில் போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணி சித்துர் சாலையில் உள்ள நாகாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 53). இவர் திருவள்ளூரில் பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவில் தலைமை போலீசாராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (50). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். யோகானந்தம் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி இருவரும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை இருவரும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை, ரூ.25 ஆயிரத்து 500 ரொக்கபணம் திருடு போனது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் யோகானந்தம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story