கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை


கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை
x

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பஞ்செட்டியில் மாடி வீட்டில் வசித்து வருபவர் பொன்ராஜ் (வயது 29). இவர் தனது வீட்டின் அருகே பிளாஸ்டிக் குழாய்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி பகுதியை பூட்டி விட்டு கீழ்பகுதியில் பொன்ராஜ் குடும்பத்தினர் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து, நள்ளிரவில் மாடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story