வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
x

மோகனூர் அருகே 10 பவுன் நகை திருட்டு போனது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்

மோகனூர்

தனியாக வீட்டில்

மோகனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாடக்காசம்பட்டி ஊராட்சி, எம். ராசாம்பாளையம் அடுத்து உள்ள மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 57). இவர் கணவர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் வெளிநாட்டிலும், மகள் திருமணம் ஆகி வெளியூரிலும் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாவாயி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பாவாயி படுத்து தூங்கி இருக்கிறார். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு மர்ம நபர் வெளியில் ஓடி உள்ளார். அதைகண்டு அதிர்ச்சியடைந்த பாவாயி திருடன் என சத்தம் போட்டு இருக்கிறார்.

10 பவுன் நகை

அதைதொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் செயின், 2 பவுன் கைச்செயின் ஒன்றும், கட்டில் தலையணை அடியில் வைத்திருந்த 5 பவுன் செயின் என 10 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பாவாயி மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story