தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டில் தரை தளத்தில் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் முதல் தளத்தில் உள்ள அறையில் தூங்க சென்றார். மறுநாள் பத்மநாபன் கீழ் தளத்திற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இது குறித்து பத்மநாபன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.