மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பா.ஜ.க. நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை,
வடசென்னை மாவட்ட பா.ஜ.க. மீனவரணி செயலாளர் லோகேஷ் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் நேற்று இணைந்தனர். அவர்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றார். மேலும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 210 மீனவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், மீனவர்களின் நலனை மக்கள் நீதி மய்யம் காக்கும் என்றும், கட்சியில் மீனவர் அணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணைத்தலைவர் மவுரியா, பொதுச்செயலாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தலைவர் நம்மவர் @ikamalhaasan முன்னிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த 210 மீனவர்கள்!!!#KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMTweets #Fishermen@Arunachalam_Adv @MouryaMNM https://t.co/zSmGi4md22 pic.twitter.com/d8smhcOOTQ
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 10, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





