அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Jan 2024 7:57 AM IST (Updated: 12 Jan 2024 10:09 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 22-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படுகிறது.

1 More update

Next Story