'திராவிட மாடல்' என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திராவிட மாடல் என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

'திராவிட மாடல்' என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் "சமூக நீதிக்கான கி.வீரமணி" விருது வழங்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கி.வீரமணி பல்வேறு திறமைகளுடன் நடமாடும் பல்கலைக்கழகமாகவும் தமிழினத்தின் விடிவெள்ளியாக திகழ்கிறார். கருணாநிதி இறந்த பின்னர் திக்கற்ற நிலையில் இருந்த தமக்கு கி.வீரமணி தைரியத்தையும், தெம்பையும் ஊட்டி அரசியல் பணிகளில் ஈடுபடச் செய்தார்.

தற்போது தாம் திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் நிலைக்கு தாம் வருவதற்கு கி.வீரமணி அளித்த ஊக்கம் முக்கியக் காரணம். 'திராவிட மாடல்' என்ற உணர்வை எனக்கு ஊட்டியவர் கி.வீரமணி. முதன்முறை நான் சிறை சென்ற போது, காவலர்கள் தாக்குதலில் இருந்து என்னை பாதுகாத்தவர் கி.வீரமணி. "தன்னுயிரையும் என்னுயிரையும் காத்த கறுப்புச் சட்டைக்காரர் கி.வீரமணி"

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story