திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் நடனமாடி சாமிக்கு மாலை அணிவித்த கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.
திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் நடனமாடி சாமிக்கு மாலை அணிவித்த கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.
ஈரோடு
கடத்தூர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. விழாவில் திருமண தடை நீங்கும் யாக பூஜை மற்றும் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். திருக்கல்யாண உற்சவத்தின்போது மாலை சூடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. மாலை மாற்றினாள் என்ற பாடலுக்கு நடனமாடி பெருமாளுக்கு மாலை அணிவித்து சாமியை தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story