ஆடி அமாவாசை: மாஞ்சோலை செல்ல 30-ம் தேதி வரை தடை


ஆடி அமாவாசை: மாஞ்சோலை செல்ல 30-ம் தேதி வரை தடை
x

ஆடி அமாவாசை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் 30-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

நெல்லை:

காரையாறு சொரிமுத்தையனார் திருக்கோவில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முழுவதுமாகசெயல்பட உள்ளதால், களக்காடு முன்பந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வரும் 30ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

அதன்படி பாபநாசம் அகஸ்தியர் அருவி,மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில்உள்ள ஓய்வு இல்லம் போன்ற பகுதிகளுக்குசுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

1 More update

Next Story