கள்ளழகர் விழா: மதுரை மாவட்டத்துக்கு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ககள்ளழகர் விழா: மதுரை மாவட்டத்துக்கு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது
மதுரை
மதுரை மாநகரில் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலகங்களும், வங்கிகளும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையை, ஜூன் மாதம் 10-ந் தேதி சனிக்கிழமையன்று விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடு செய்யப்படும். மேற்கண்ட தகவல்கள் கலெக்டர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story