மதுரையில் தங்ககருட வாகனத்தில் கள்ளழகர்


மதுரையில் தங்ககருட வாகனத்தில் கள்ளழகர்
x

மதுரையில் தங்ககருட வாகனத்தில் கள்ளழகர் அருள்பாலித்தார்.

மதுரை

அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு வருடம் தோறும் புரட்டாசி மாதம் மதுரை கீழ மாரட் வீதி நவநீதக் கண்ணன் பஜனை கூடம் சார்பாக அழகுமலையான் பட்டு வர்ண குடை அங்கிருந்து பாதயாத்திரையாக நேற்று அதிகாலையில் புறப்பட்டு வந்தது.

இந்த குடை தல்லாகுளம், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோவிலை அடைந்தது. அங்கு சகல பரிவாரங்களுடன் கோவிலின் நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று ஆண்டாள் சன்னதியை அடைந்தது.

இதைெதாடர்ந்து கள்ளழகர் பெருமாளுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், நூபுர கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மனோரஞ்சிதம், ரோஜா, சம்மங்கி, மல்லிகை, செவ்வந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து தங்கக்கருடன் வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். மேலும் மதுரையிலிருந்து பாத யாத்திரையாக கொண்டு வரப்பட்டிருந்த அழகுமலையான் பட்டுவர்ண குடையை மேளதாளம் முழங்க பட்டர்களின் வேத மந்திர பூஜையுடன் கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, பஜனை குழுவினர் பக்திபாடல்கள் பாடினர். விழா ஏற்பாடுகளை பஜனை நிர்வாக குழுவினர்கள் செய்திருந்தனர். விழாவில் தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் சேகர், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, பேஷ்கார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story