கள்ளக்குறிச்சி: தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பாஜக நிர்வாகி கைது


கள்ளக்குறிச்சி: தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பாஜக நிர்வாகி கைது
x

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சி மூலம் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், மூன்றரை சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story