கள்ளக்குறிச்சி கலவரம் - "மாணவர்களின் சான்றுகளை எரித்த 'லட்சாதிபதி' கைது"
கலவரத்தின் போது பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி பேருந்துகள் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஏற்கெனவே 322 பேரை கைதுசெய்ததனர். இந்த நிலையில், சம்பவத்தின் போது அங்கிருந்த சிசிடிவி, மற்றும் சான்றிதழுக்கு தீ வைத்தபோது எடுக்கப்பட்ட வைரலான வீடியோக்களை கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்தியதாக சின்ன சேலம் அருகே வசிக்கக்கூடிய 34 வயதான லட்சாதிபதி என்ற நபரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைதுசெய்து தற்போது நீதிமன்ற காவலுக்கு கொண்டுவந்தனர்.
Related Tags :
Next Story