கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
x

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையம், தென் இந்தியாவில் மின் உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்ப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கு பகிரிந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் அலகு 2-ல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கிய அலகு 2-ல் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து தனது முழுத் திறனை அடையும் என அணுமின் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story