தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் கடிதம்


தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் கடிதம்
x

தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 30 இடங்களைக் கொண்ட எம்.எஸ்.சி. பயோடெக் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. அந்த விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% இட ஒதுக்கீட்டைப் பெற, உரிய வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குப் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சி. பயோடெக் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தில், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததை மாற்றி, தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.


Next Story