காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா
x

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம்

பிரம்மோற்சவ விழா

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் பலரும் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. ஏலவார் குழலி அம்பிகையும் ஏகாம்பரநாதர் சாமியும் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை பவழக்கால் சப்பரத்தில் மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலி அம்மையாரும் எழுந்தருளி விநாயகர், வள்ளி, தெய்வானையோடு முருக பெருமான், சண்டிகேஸ்வரர் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நாயன்மார்கள் திருவிழா

விழாவில் வருகிற 31-ந்தேதி 63 நாயன்மார்கள் திருவிழாவும், இரவு வெள்ளித்தேரோட்டமும், அடுத்த மாதம் 1-ந் தேதி தேரோட்டமும், 5-ந்தேதி அதிகாலை பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறுகிறது. 8-ந்தேதி 108 கலசாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story