காஞ்சிபுரம்: காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவியும், மாணவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக மது அருந்திவிட்டு வந்தத 4 பேர் கொண்ட கும்பல், மாணவி, மற்றும் மாணவரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து காவல்துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார், மணிகண்டன், விமல், தென்னரசு ஆகிய 4 பேர் மாணவியை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் புகார் அளிக்காதபோதிலும், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், போலீசார் துரிதமுடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்துள்ளனர்.