காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா


காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
x

காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை யொட்டி நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பால் குடம் எடுத்தும் அலகுகள் குத்தியும் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம், காவடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கை சிங்கார வேலன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிங்கார வேலன் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிவித்து விரதமிருந்த பக்தர்கள் சடல் சுற்றுதல், மிளகாய் பொடி அபிஷேகம், 108 வேல் குத்துதல், தேர் இழுத்தல். உள்ளிட்டவைகள் செய்து தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். பின்னர் மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கையுடன் சிங்கை சிங்காரவேலன் ஊர்வலமாக வந்தார்.


Next Story