கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்காக களத்தில் இறங்கும் திமுக..!


கர்நாடக தேர்தல்: காங்கிரசுக்காக களத்தில் இறங்கும் திமுக..!
x

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கர்நாடக திமுக அமைப்புகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வருகிற 2023 மே 10 அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

கர்நாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story