கார்த்திகை தீபத்திருவிழா: மதுரை- திருவண்ணாமலை இடையே 2 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்


கார்த்திகை தீபத்திருவிழா: மதுரை- திருவண்ணாமலை இடையே 2 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்
x

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை- திருவண்ணாமலை இடையே 2 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை - விழுப்புரம் - மதுரை விரைவு ரெயில்களின் சேவை நாளை (டிசம்பர் 6) நாளை மறுதினம் (டிசம்பர் 7) ஆகிய 2 நாட்கள் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி மதுரை - விழுப்புரம் விரைவு ரெயில் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு வழக்கமாக காலை 11.15 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் விழுப்புரத்திலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு திருவண்ணாமலை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதுரை விரைவு ரெயில் (16867) மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு விழுப்புரம் வருகிறது. விழுப்புரத்திலிருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. இந்த ரெயில் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story