கருணாநிதி நூற்றாண்டு விழாவை கரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்: அமைச்சர் பேச்சு


கருணாநிதி நூற்றாண்டு விழாவை கரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்: அமைச்சர் பேச்சு
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிநூற்றாண்டு விழாவை கரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும் எனஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்

செயற்குழு கூட்டம்

கரூரில் நேற்று மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூத் கமிட்டியில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செயல்பட கூடியவர்களை நியமனம் செய்திட வேண்டும். சார்பு அணியை பொறுத்தவரை பெயரளவில் பரிந்துரை செய்யாமல் தேர்தல் களத்தில் இயக்கத்திற்கு பணியாற்ற கூடியவராகவும், அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ள கூடியவராகவும், அனைவரையும் ஒன்றிணைக்க கூடியவராகவும் இருக்க வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் எழுச்சியோடு, ஆண்டு முழுவதும் கொண்டாட கூடிய வகையில் மிக சிறப்பாக அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

எழுச்சியோடு கொண்டாட வேண்டும்

ஒவ்வொரு கிளை கழகங்கள் வாரியாக, பேரூராட்சி வட்டங்கள், நகராட்சி வட்டங்கள் வாரியாகவும், மாநகராட்சி வார்டுகள் வாரியாகவும் சிறப்பாக எழுச்சியோடு, மக்கள் பயனுள்ள திட்டங்களை வழங்கி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இணைந்து செய்திட வேண்டும். பல்வேறு பாரத பிரதமர்களை உருவாக்கி, ஜனாதிபதிகளை உருவாக்கி தமிழ்நாட்டின் சிற்பியாக இருந்து, உலகளவில் தமிழ்நாட்டிற்கு அங்கீகாரத்தை பெற்று தந்த கருணாநிதியின் பிறந்தநாள், அது நூற்றாண்டு விழா என்றால் மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் மிக எழுச்சியோடு நடைபெற்றது என்ற நிலையை உருவாக்க கூடிய வகையில் அதற்கான ஏற்பாடுகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 9 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் தி.மு.க. உறுப்பினர்களாக 1,46,000 பேர் இருக்கிறார்கள். சராசரியாக 16 சதவீதம் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றி 3-ல் 1 பங்கு, 3 லட்சம் பேரை தி.மு.க. உறுப்பினர்களாக இணைக்க கூடிய பணிகளை செய்திட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்றவர்கள்

இதில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, எம்.எல்.ஏக்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், எஸ்.பி.கனகராஜ், தாரணி சரவணன், சுப்பிரமணியன், கோல்டுஸ்பாட் ராஜா, அன்பரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story