காஷ்மீருக்கும் தமிழ்நாட்டுக்கும் பல தொடர்புகள் உள்ளன - கவர்னர் ஆர்.என்.ரவி
இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் வளாகத்தில் "விட்டஸ்டா 2023" நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது,
வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் அல்ல. அதில் நம் வாழ்வியலும் அடங்கும் என்றார். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல தொடர்புகள் உள்ளது. இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என்றார்.
18 ஆம் நூற்றாண்டு முன் வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாக இந்தியா இருந்துள்ளது என்றும், அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story