பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு உத்தரவு


பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு உத்தரவு
x

பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

சென்னை

சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 29) என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி கடத்தி சென்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க முயன்ற போது சிறுவனை விட்டு விட்டு தப்பினார். 2013-ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது.

இதுகுறித்து குமரன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், பிச்சை எடுக்க வைக்கும் நோக்கத்தில் சிறுவனை ஏழுமலை கடத்த முயன்றது தெரியவந்தது.

விசாரணைக்கு பின்பு, சென்னை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ஏழுமலை மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.ஆனந்த், ஏழுமலை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story