சிறுமியை கடத்திய வாலிபர் கைது


சிறுமியை கடத்திய வாலிபர்  கைது
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவள் 14 வயதுடைய சிறுமி. இவள் திடீரென மாயமானாள். இது குறித்த சிறுமியின் பெற்றோர் பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் லா.கூடலூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியையும் மீட்டனர்.


Next Story