சிறுமி கடத்தல்


சிறுமி கடத்தல்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:16+05:30)

சிறுமியை கடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அடு்த்த திருவெண்ணெய்நல்லூர் அருகே கூரானூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவள் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வந்தாள். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும்வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி அலைந்தனர். இருப்பினும் அவள் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடை உரிமையாளர் வல்லரசு என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story