மின்சாரம் தாக்கி பலி: என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.11½ லட்சம் இழப்பீடு- ஊராட்சி சார்பில் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மின்சாரம் தாக்கி பலி: என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.11½ லட்சம் இழப்பீடு- ஊராட்சி சார்பில் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.11½ லட்சம் ஊராட்சி சார்பில் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் முத்துகிருஷ்ணன். என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் இங்குள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது இரும்பு வேலி அருகே விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு இறந்தார். எனது மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- ஊராட்சி தரப்பில் தான் மின்கம்பம் பராமரிக்கப்படுகிறது. அவர்கள் தான் சம்பவ இடத்தில் இரும்பு வேலியும் அமைத்துள்ளனர். ஊராட்சியால் அமைக்கப்பட்ட வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் என்ஜினீயரிங் மாணவர் பலியாகியுள்ளார். எனவே அவரது குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் இழப்பீடாக 12 வாரத்தில் ஏ.காலாப்பூர் ஊராட்சி தரப்பில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story